ஈஸ்டர் தாக்குதலுக்கும் ஜே.வி.பிக்கும் தொடர்பில்லை: அனுரகுமார

Date:

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது என்று ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமான எந்த விசாரணை அறிக்கையிலும் கூறப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதல் நடத்தி உயிரிழந்த இரண்டு பேரின் தந்தையான வர்த்தகர் இப்ராஹிம் மக்கள் விடுதலை முன்னணி தேசிய பட்டியலில் இடம்பெற்றிருந்தமை தொடர்பில் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் குற்றம் சுமத்தி உரையாற்றிமைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராக சுமத்தும் குற்றச்சாட்டு புஷ்வானமே அன்றி உண்மையான வெடியல்ல.

இப்ராஹிமுக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கில் சட்டத்தரணியாக அலி சப்றியே முன்னிலையாகி இருந்தார்.

அவருக்கு சட்டத்தரணியாக இருந்தார் என்பதற்காக அலி சப்றிக்கு பயங்கரவாத செயலுடன் தொடர்புள்ளது என கூற முடியாது.

இப்ராஹிம் ஒன்றரை இரண்டு வருடங்கள் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதன் போது கூட மக்கள் விடுதலை முன்னணிக்கும் தாக்குதலுக்கு தொடர்புள்ளமைக்கான எவ்வித விடயங்களும் வெளியாகவில்லை எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...