ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விவாதத்தில் கலந்துகொள்ளாத அமைச்சர்கள்!

Date:

பாராளுமன்றத்தில் நடந்து வரும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதத்தில் அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் கடந்த இரண்டு நாட்களாக கலந்து கொள்ளவில்லை.

இவர்கள் முக்கியமான இந்த விவாதத்தில் கலந்துக்கொள்ளாதது குறித்து அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்த போது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பாராளுமன்றத்தில் விரிவாக விடயங்களை வெளியிட்டு வந்தனர்.

குறிப்பாக சோனிக்-சோனிக் என்ற வார்த்தையை ஹரின் பெர்னாண்டோவே பாராளுமன்றத்தில் வெளிக்கொண்டு வந்தார்.

இதனடிப்படையில் இன்று நடைபெறும் விவாதத்தில் இவர்கள் இருவரும் கலந்துக்கொள்வார்கள் என பலர் எதிர்பார்த்த போதிலும் அவர்கள் விவாதத்தில் கலந்துக்கொள்ளவில்லை.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான செனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதி முதல் இன்று வரை பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது.

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...