2023 சர்வதேச உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் இலங்கை கிரிக்கெட் சபையில் ப்ரமோத்ய விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற தெரிவு குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக தசுன் ஷானகவின் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க தவறிய நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த ஆசிய கிண்ண தொடரில் அவர் பெற்ற ஓட்டங்கள் 60க்கும் குறைவாகும்.
கடந்த காலங்களில் 13 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளை பதிவு செய்யத இலங்கை அணி ஆசிய கிண்ண இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்கொண்டு சகல விக்கெட்டுகளையும் இழந்து 50 ஓட்டங்களை மாத்திரமே பெற்று மிகவும் மோசமான ஒரு தோல்வியை பதிவு செய்தது.
இந்த தோல்வி இலங்கை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தோல்வியை அடுத்து தசுன் ஷானகவின் தலைமை தொடர்பில் பலரும் விமர்சனங்கள் வெளியிட நிலையில் அவரை எதிர்வரும் உலக கிண்ண இலங்கை அணிக்கான தலைவராக இலங்கை கிரிக்கெட் சபை நியமித்துள்ளது.