உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தின் முன்மொழிவுகள் அரசியலைப்பிற்கு முரணானவை அல்ல:உச்ச நீதிமன்றம்

Date:

உத்தேச உள்நாட்டு வருவாய் (திருத்தம்) சட்டமூலத்தில் உள்ள விதிகள் அரசியலமைப்பிற்கு முரணானவை அல்ல என உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, உத்தேச சட்டமூலத்தை தனிப்பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றலாம் என உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம் அறிவிக்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை திருத்துவதற்காக முன்மொழியப்பட்ட உள்நாட்டு வருவாய் (திருத்தம்) சட்டமூலம் ஜூலை மாதம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

இருப்பினும், அதை எதிர்த்து இரண்டு ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதன்படி, இந்த மனுக்கள் மீதான விசாரணையை அடுத்து, உச்ச நீதிமன்ற பெஞ்ச், சபாநாயகருக்கு உத்தரவிட்டது.

Popular

More like this
Related

கேம்பிரிட்ஜ் அகராதியில் GenZ, Gen Alpha தலைமுறைகள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் இணைப்பு!

கேம்ப்ரிட்ஜ் அகராதி கடந்த ஒரு ஆண்டில் 6,000-க்கும் மேற்பட்ட புதிய சொற்களையும்,...

2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை 16% ஆக அதிகரிப்பு!

2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின்...

சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி ஏற்படும் வாய்ப்பு

சிக்குன்குனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி...

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களிடம் அமைச்சர் நலிந்த கோரிக்கை!

உரிய சம்பளமும் மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்களால்...