கிரிக்கெட் ரசிகர்களுக்கான விசேட அறிவித்தல்!

Date:

இலங்கை அணி பங்கேற்கும் ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் சுப்பர் 4 சுற்றின் முதலாவது போட்டி இன்று கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பங்களாதேஷ் அணியுடனான போட்டி பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டியின் சுப்பர் 4 சுற்றுக்கான டிக்கெட் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள சுப்பர் 4 சுற்றுப் போட்டிகளைக் காண 1,000 ரூபாவிற்கு டிக்கெட்டுகள் கிடைக்கப்பெறும்.

கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் Lower Block C மற்றும் D பிரிவில் செப்டம்பர் 9, 12, 14, 15 ஆகிய திகதிகளில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை விளையாட்டு ரசிகர்கள் ரூ.1,000க்கு வாங்க முடியும்.

இதனிடையே இன்றைய போட்டி மழையால் இரத்து செய்யப்பட்டால் நாளை போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்நிலையில் இன்றைய போட்டிக்கு வாங்கப்பட்ட டிக்கெட்டுகள் நாளை செல்லுபடியாகும்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...