உலகெங்கிலும் உள்ள குறைந்த வருமானம் கொண்ட மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் துன்பங்களைப் போக்கும் வகையிலான சவூதி அரேபியாவின் மனிதாபிமான முயற்சிகளின் அடிப்படையில், இரண்டு புனித ஸ்தலங்களின் பாதுகாவலர் சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவூத், முடிக்குரிய இளவரசரும் சவூதி அரேபியாவின் பிரதமருமான அதிமேதகு இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் ஸஊத் மற்றும் சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தினதும் தயாள உத்தரவுகளின் கீழ் 2023 செப்டெம்பர் 07 முதல் 16 வரையான காலப்பகுதியில் இலங்கையில் பார்வைக் குறைபாட்டுக்கெதிரான தன்னார்வ திட்டத்தை செயல்படுத்துகிறது.
ஆயிரக்கணக்கானவர்களின் நோய்களைக் கண்டறிந்து அவர்களை மருத்துவச் சேவைகளை வழங்குதல், சத்திரசிகிச்சை மேற்கொள்ளல், சிகிச்சையளித்தல், மருந்துகள் வழங்குதல், கண்புரை அகற்றல் என வகைப்படுத்தல் நடைபெறுகின்றது.
அத்துடன் தேவையானவர்கள் சத்திர சிகிச்சைக்கு உள்ளாக்கப்படுவதோடு கண்ணாடிகள் மற்றும் லென்ஸுகளும் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதோடு சிகிச்சைக்கு வந்தவர்களுக்கான சுகாதார விழிப்புணர்வு அறிவூட்டல்களும் நடத்தப்படுகின்றன.