ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான செனல் 4 தொலைக்காட்சியின் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குழுவை நியமித்துள்ளார்.
விசாரணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் ஓய்வேற்ற விமானப்படை தளபதி ஏ.சீ.எம்.ஜயலத் வீரக்கொடி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ச ஏ.ஜே.சோசா ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
செனல் 4 வெளியிட்டுள்ள தகவல் தொடர்பாக உரிய விசாரணைகளை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற சிரேஷ்ட அரச அதிகாரிகளை கொண்ட குழுவை நியமிக்க ஜனாதிபதி அண்மையில் தீர்மானித்திருந்தார்.