ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கிடையில் எதிர்வரும் 26 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொள்ளவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடனுதவியை பெற்றுக்கொள்வது தொடர்பான இறுதி கலந்துரையாடலாக இது அமையவுள்ளது.
குறித்த கலந்துரையாடலின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையை பெறுவது தொடர்பான ஒப்பந்தமும் கைச்சாத்திப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.