டுபாய் அரசாங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படுகின்ற சர்வதேச அல் குர்ஆன் மனனப் போட்டி இம்முறையும் 7வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப் போட்டியில் இவ்வருடம் இலங்கை சார்பாக புத்தளம் கதீஜா பெண்கள் அரபுக் கல்லூரி மாணவி அதீலா அபுல் ஹுதா என்ற மாணவி பங்குபற்றவுள்ளார்.
இம் மாணவி கடந்தஜுலை மாதம் 15ஆம் திகதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சவூதி அரேபிய தூதுவராலயத்தின் பூரண ஒத்துழைப்புடன் Moven pick Hotelல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய அல் குர்ஆன் மனனப் போட்டியில் 30 ஜுஸ்ஃ பிரிவில் முதலாம் இடம் பெற்று இவ் வாய்ப்பை பெற்றுள்ளார்.