நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

Date:

தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக நாடளாவிய ரீதியில் மீண்டும் டெங்கு நோய் பரவக்கூடும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரித்துள்ளது.

இந்த வருடத்தில் மேல் மாகாணத்தில் மாத்திரம் 30,300 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

கடும் மழை காரணமாக பாடசாலை மாணவர்களிடையே டெங்கு பரவும் அபாயம் காணப்படுவதாகவும், முடிந்தவரை சுற்றுப்புறங்களை சுத்தம் செய்து டெங்கு இல்லாத பிரதேசமாக மாற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை பதிவாகியுள்ள மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில் சுமார் 20 வீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் எனவும், தற்போது பாடசாலை செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் அவர்கள் இது தொடர்பில் அக்கறை கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி முதல் செப்டெம்பர் வரை நாடளாவிய ரீதியில் 62,254 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், மொத்த நோயாளர்களில் 30,355 பேர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 13,218 நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 13,105 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 4,032 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...