வீதி சமிஞ்சைகளை மீறும் செயற்பாடுகள் அதிகரிப்பு!

Date:

அம்பாறை மாவட்டத்தின் பிரதான வீதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீதி சமிஞ்சைகளை மீறும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதுடன் விபத்துக்களும் ஏற்படுகின்றன.

குறிப்பாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட முக்கிய சந்திகள் பொது இடங்களுக்கு முன்பாக வீதி சமிஞ்சைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட வீதி சமிஞ்சையை அண்டிய பகுதிகளில் போக்குவரத்து பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டும் கூட பாதசாரிகள் முதல் வாகன சாரதிகள், துவிச்சக்கரவண்டியில் பயணிப்போர் வீதி ஒழுங்கு விதிமுறைகளை மீறுகின்ற செயற்பாடுகளை காண முடிகின்றது.

இவ்வீதி சமிஞ்சைகள் உரிய செயற்பாட்டில் உள்ள போதிலும் துவிச்சக்கரவண்டியில் பயணிப்போர் நிறுத்தல் சமிஞ்சையில் அவ்விடத்தில் நிற்காது பயணம் செய்வதை காண முடிகின்றது.

இது தவிர சில மோட்டார் சைக்கிள் வாகன உரிமையாளர்கள் கூட வீதி சமிஞ்சை குறியீட்டை மதிக்காமல் அவசரமாக நிறுத்தாமல் பயணிப்பதுடன் வீதி விபத்துக்களை ஏற்படுத்தி தப்பி செல்கின்றனர்.

எனவே உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் அவதானம் செலுத்தி வீதி சமிஞ்சை குறியீட்டை மீறும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...