அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தொழில் வல்லுநர்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டிற்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் முதல் மதிப்பாய்வை நடத்துவதற்காக, செப்டெம்பர் 15 ஆம் திகதி IMF பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு முன்னதாகவே அரசாங்கத்திற்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் வழங்கிய எழுத்துமூல உறுதிமொழிக்கு அமைய ஜனாதிபதி செயற்பட வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.