இந்திய – இலங்கை கப்பல் சேவை இன்று ஆரம்பம் l டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

Date:

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கப்பல் சேவை இன்று (14) முதல் ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி முதலாவது பயணிகள் கப்பல் இந்தியாவில் இருந்து இன்று (14) காலை இலங்கையை வந்தடைய உள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

தென்னிந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையில் இந்த பயணிகள் படகுச் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 50 பயணிகளுடன் இந்த கப்பல் இன்று காலை 11.30 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய கப்பல் கூட்டுத்தாபனம் பயணிகள் படகு சேவையை இயக்குகிறது.

இந்தியாவில் இருந்து காலை பயணத்தை  ஆரம்பிக்கும்  இந்த பயணிகள் கப்பல், பிற்பகல் 02.30 மணிக்கு காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து மீண்டும் இந்தியாவை நோக்கி புறப்பட உள்ளது.

இரு வழி பயணத்திற்கு 53,500 ரூபாவும், ஒருவழி பயணத்திற்கு 27,000 ரூபாவும் அறவிடப்படவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...

சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே...

இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் விஜித ஹேரத்!

‘ரைசினா கலந்துரையாடல் 2026’ (Raisina Dialogue 2026) மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா...

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...