இஸ்ரேல்-பலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபை அதன் பாதுகாப்பு கவுன்சிலை உடனடியாக கூட்ட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று புதன்கிழமை சஜித் பிரேமதாச, இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
உடனடியாக சர்வதேச சமூகம் போரை முடிவுக்கு கொண்டுவர மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் எனவும் கூறினார்.
காஸா பகுதியிலுள்ள Al-Ahli Arab மருத்துவமனையில் ஏற்பட்ட குண்டு தாக்குதலில் கிட்டத்தட்ட 500 பேர் உயிரிழந்துள்ளனர்.
போரில் 1,400 இஸ்ரேலியர்கள் மற்றும் 3,000 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவை அனைத்தையும் படுகொலை என்று அழைக்கலாம்.
இந்த போர் சூழ்நிலையை அமைதிப்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களை கூட்டுமாறும், இவரகளின் தலையீட்டில் இந்த பயங்கரவாதத்தையும் அரச பயங்கரவாதத்தையும் உடனடியாக நிறுத்தக் கோருவதற்கான பிரேரணையை முன்வைக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றில் கோரிக்கை விடுத்தார்.