இஸ்ரேல்-பலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உடன்கூட வேண்டும்; சபையில் சஜித் கோரிக்கை

Date:

இஸ்ரேல்-பலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபை அதன் பாதுகாப்பு கவுன்சிலை உடனடியாக கூட்ட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று புதன்கிழமை சஜித் பிரேமதாச, இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

உடனடியாக சர்வதேச சமூகம் போரை முடிவுக்கு கொண்டுவர மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் எனவும் கூறினார்.

காஸா பகுதியிலுள்ள Al-Ahli Arab மருத்துவமனையில் ஏற்பட்ட குண்டு தாக்குதலில் கிட்டத்தட்ட 500 பேர் உயிரிழந்துள்ளனர்.

போரில் 1,400 இஸ்ரேலியர்கள் மற்றும் 3,000  பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவை அனைத்தையும் படுகொலை என்று அழைக்கலாம்.

இந்த போர் சூழ்நிலையை அமைதிப்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களை கூட்டுமாறும், இவரகளின் தலையீட்டில் இந்த பயங்கரவாதத்தையும் அரச பயங்கரவாதத்தையும் உடனடியாக நிறுத்தக் கோருவதற்கான பிரேரணையை முன்வைக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றில் கோரிக்கை விடுத்தார்.

Popular

More like this
Related

900 பேருக்கு மருத்துவ சேவை: பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்க MFCD மற்றும் ஜப்பான் நிறுவனங்களின் கூட்டு முயற்சி

'டிட்வா'   புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக நடத்தப்பட்ட இறுதி கட்ட தொற்றா நோய்கள்...

மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெற்றது குற்றப்புலனாய்வுத் திணைக்களம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாரியாரான மைத்ரி விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம்...

‘வெசாக் வாரத்தில் ஹஜ்ஜுப் பெருநாள்: உழ்ஹிய்யா கடமைகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு சமூக நீதிக் கட்சி கோரிக்கை.

அரசியல் இலாபங்களுக்காகவும் ஏனைய குறுகிய நோக்கங்களுக்காகவும் திட்டமிடப்பட்ட முறையில் மீண்டும் ஒரு...

மாணவர்களிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு: “EduCycle” கழிவு முகாமைத்துவத் திட்டம் பாடசாலைகளில் ஆரம்பம்!

இலங்கை பாடசாலை மாணவர்களிடையே நிலையான சுற்றுச்சூழல் பழக்கவழக்கங்களை ஏற்படுத்தும் நோக்கில், “EduCycle”கழிவு...