இஸ்ரேல்-பாலஸ்தீன் மோதலில் உயிரிழந்த இலங்கை பிரஜையான அனுலா ரத்நாயக்கவின் பூதவுடல் நாட்டிற்கு இன்று கொண்டு வரப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பூதவுடன் நாட்டிற்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது.
அனுலா ரத்நாயக்கவின் பூதவுடலை பெற்றுக்கொள்வதற்காக, அவரது உறவினர்கள் விமான நிலையத்திற்கு வருகைத்தந்திருந்தனர்.அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளும் விமான நிலைய வளாகத்தில் பிரசன்னமாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேல் நாட்டிலுள்ள பெண்ணொருவரின் பராமரிப்பு பணிகளுக்காக சென்றிருந்த அனுலா ரத்நாயக்க, கடந்த 7ம் திகதி உயிரிழந்திருந்தார்.
ஹமாஸ் அமைப்பினால் நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் அனுலா ரத்நாயக்க உயிரிழந்திருந்ததாக அந்த நாட்டிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்திருந்தது.
ஹமாஸ் அமைப்பின் தாக்குதலிலிருந்து, குறித்த இஸ்ரேல் பெண்ணின் உயிரை காற்றுவதற்கு அனுலா ரத்நாயக்க முயற்சித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்னாரது இறுதிக் கிரியைகள் தொடர்பான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.