“உங்களையும் ஒருநாள் சுட்டு வீழ்த்துவர்” : இஸ்ரேல் பிரதமருக்கு துருக்கி அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை

Date:

காசா மீது  இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இதற்கு துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

“நீங்களும் ஒருநாள் கொல்லப்படுவீர்கள்” என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை துருக்கி கல்வித்துறை துணை அமைச்சர் எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் ஹமாஸ் போர் உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. இரு தரப்பில் இருந்தும் மேற்கொள்ளப்படும் மூர்க்கமான தாக்குதலால் அப்பாவி பொதுமக்களும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

போரில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் துருக்கி கல்வித்துறை துணை அமைச்சர் நசீப் இல்மாஸ், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை குறிப்பிட்டு “ஒருநாள் உங்களையும் சுட்டு வீழ்த்துவார்கள். அப்போது நீங்களும் இறப்பீர்கள்” என சர்ச்சைக்குரிய கருத்தொன்றை பதிவிட்டுள்ளார்.

இத்துடன் காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் குறித்த வீடியோவைப் பகிர்ந்து துருக்கி தன் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது.

இஸ்ரேல் மீது துருக்கி, ஈரான் போன்ற இஸ்லாமிய நாடுகள் ஏற்கெனவே கடும் விமர்சனங்களை வைத்து வருகிறன.

காசா பகுதிக்கு தண்ணீர், மின்சாரத்தை துண்டித்தது, பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் தாக்குதலை தொடுத்தது, உலகமே தடை செய்த பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தியது என இஸ்ரேல் போர் குற்றத்தில் ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டியிருந்தன.

அதேபோல துருக்கி பலஸ்தீனத்தின் போராளிகளுக்கு உதவுவதாக இஸ்ரேல் விமர்சித்திருந்தது. இப்படி இருக்கையில் துருக்கி அமைச்சர் ஒருவர் நேரடியாக இஸ்ரேல் அதிபருக்கு மிரட்டல் விடுத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...