சிறுவர்களுக்கு செழிப்பான நாட்டை கட்டியெழுப்ப வேலைத்திட்டம்: ஜனாதிபதி

Date:

சவாலான சகாப்தத்தில் அனைத்து சிறுவர்களுக்கும் செழிப்பான நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலக சிறுவர் தினம் மற்றும் முதியோர் தின வாழ்த்துச் செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தியடைந்த இலங்கையை உருவாக்கும் பயணத்தில் தற்போதைய இளம் சந்ததியினரே முன்னோடிகளாக திகழ்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

புதிய தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன்களைக் கொண்டு சவால்களை சமாளிக்கும் சமச்சீர் ஆளுமை கொண்ட திறமையான குடிமக்களாக சிறுவர்களை சமூகமயமாக்கும் வகையில் கல்வி முறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையின் சிரேஷ்ட பிரஜைகள் தாம் போற்றி வந்த பெறுமதிமிக்க நற்பண்புகளை உலகுக்கு பிரதிபலிக்கும் வகையில் உலக முதியோர் தினம் கொண்டாடப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...