சீரற்ற காலநிலையால் வத்தளை பிரதேச மக்கள் பாதிப்பு!

Date:

கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பிரதேசத்தின் உஸ்வட்டகெய்யாவ, குறிஞ்சிவத்தை போன்ற தாழ்நில பிரதேசங்கள் சீரற்ற காலநிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இப்பகுதிகளில் சுமார் 3,000 குடும்பங்களில் 8,000 ற்கும் மேற்பட்ட மக்கள் நிர்கதிக்குள்ளாகியுள்ளனர். இதில் 2,100 மேற்பட்ட மாணவர்களும் அடங்குவர்.

தொடரும் மழை வீழ்ச்சி காரணமாக இப்பகுதிகளில் சுமார் 2 அடி தொடக்கம் 4 அடி வரையில் நீர்மட்டம் தேங்கியுள்ள நிலையில் வடிகால்கள் இல்லாமையால் இந்நீர் மட்டமானது உயரும் அபாயத்திலுள்ளது.

இதனால் நிர்க்கதியாகியுள்ள மக்களில் சிலர் பாடசாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளதோடு, பலர் தஞ்சமடைய இடமில்லாது வெள்ள நீரில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், சில தொண்டு அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் உணவுப் பொதிகள் மற்றும் உலர் உணவுகளையும் வழங்கிவரும் நிலையில் இவை போதுமான நிவாரணமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...

தீவிரமடையும் டெங்கு பரவல்: நாடு தழுவிய ரீதியில் விசேட ஒழிப்பு நடவடிக்கை!

டெங்கு ஒழிப்பு வாரத்தின் நான்காம் நாள் இன்றாகும். இன்றைய தினம் அனைத்து...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் மழை: மீனவர்களுக்கும் எச்சரிக்கை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...