தவளைகளின் இரத்தத்தை குடிக்கும் புதிய நுளம்பு இனம் கண்டுபிடிப்பு

Date:

கம்பஹா மாவட்டத்தின் மீரிகம பிரதேசத்தில் தவளைகளின் இரத்தத்தை குடிக்கும் புதிய வகை நுளம்பு இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Uranotaenia Trilineata என அடையாளம் காணப்பட்டுள்ள இது இலங்கையில் தற்போது பதிவாகியுள்ள சிறிய வகை நுளம்பு இனமாகும் என பூச்சியியல் அதிகாரி கயான் ஸ்ரீ குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

அவை 2-3 மில்லிமீற்றர் அளவுள்ளவை எனத் தெரிவித்த குமாரசிங்க, சமீபத்திய கண்டறிதல் இலங்கையில் இனங்காணப்பட்ட நுளம்பு இனங்களின் எண்ணிக்கையை 156 ஆக அதிகரித்துள்ளது என்றார்.

சுமார் 108 வருடங்களுக்கு முன்னர் தென் கொரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நுளம்பு இனம் தாய்லாந்தில் கண்டறியப்பட்ட பின்னர் தற்போது இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...