நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்: சட்டமா அதிபர்

Date:

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் சார்பில் இன்று உயர்நீதிமன்றில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

சட்டத்தில் பல விதிகள் திருத்தப்படும் என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம் குறித்த திருத்தங்கள் பாராளுமன்றத்தில் இடம்பெறும் குழுநிலை விவாதத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நிகழ்நிலை காப்புச் சட்டத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றில் 45 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்றும், நாளையும், நாளை மறுதினமும் உயர் நீதிமன்றில் விசாரணைக்குட்படுத்தப்பட உள்ளன.

இன்று இடம்பெற்ற விசாரணைகளின் போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தினார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)...

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...