பாகிஸ்தானில் இடம்பெற்ற கோர விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் பாபர்லோய் என்ற பகுதியில் உள்ள நெடுஞ்சாலை அருகே வேன் ஒன்று சென்று கொண்டிருந்தபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது வேன் வேகமாக மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த 16 பேரை மீட்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.