பாதசாரி கடவையில் இடம்பெற்ற கோர விபத்து!

Date:

தெற்கு களுத்துறை பிரதான வீதியில் பாதசாரி கடவையில் பயணித்த பெண் ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த பெண்  உயிரிழந்துள்ளார்.

பேருவளை மக்கொன பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய மிஹிரி ஜானகி என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று (23) மாலை 5.45 மணியளவில் குறித்த பெண் தனது தாயின் இரத்த மாதிரி அறிக்கையுடன் பாதசாரி கடவையை கடந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பொலிஸ் காவலில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளில் மோதிய பெண் சில மீற்றர் தூரம் மோட்டார் சைக்கிளுடன் இழுத்துச் செல்லப்பட்டு இரும்பு வேலியில் மோதி நின்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் சாரதி களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...