பாலஸ்தீன தூதுவருடன் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தூதுக்குழு சந்திப்பு!

Date:

காஸாவில் தொடரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக பாலஸ்தீன மக்களுடன் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் ஜமாஅத்தின் தூதுக் குழுவொன்று அதன் பொதுச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி அவர்களின் தலைமையில் கடந்த வெள்ளியன்று (27) இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் டாக்டர் சுஹைர் எம்.எச். தர் ஸைட். அவர்களை தூதுவராலயத்தில் சந்தித்து கலந்துரையாடியது.

இதன்போது காஸா மற்றும் மேற்குக் கரையின் தற்போதைய நிலைமை குறித்து தூதுக் குழுவினருடன் கலந்துரையாடிய தூதுவர், இந்த சோகத்தின் போது பாலஸ்தீன மக்களுடன் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஒருமைப்பாட்டுக்காக நன்றி தெரிவித்தார்.

மேலும், இலங்கை மக்கள் பாலஸ்தீனத்தில் நீதிக்காக தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதையும் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில் பாலஸ்தீன மக்களுடனான அவர்களது ஒருமைப்பாட்டையும் அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

இதன்போது தூதுக்குழுவினர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜமாஅத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் நகலை தூதுவரிடத்தில் கையளித்தனர்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...