‘புதியவர்கள் தான் அரசியலுக்கு வரவேண்டும்’: ஆன்மீக பயணங்களை ஆரம்பித்த மஹிந்த

Date:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அளுத்கமயில் உள்ள மலை விகாரையொன்றுக்கு சென்று ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளார்.

நேற்றைய தினம் மாத்திரம் நான்கு விகாரைகளில் முன்னாள் ஜனாதிபதி வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

“புதியவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அவர்கள் முன்வந்தால் நாம் முழுயைான ஆதரவை வழங்குவோம். பொதுஜன பெரமுனவுக்கு இளம் தலைவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.    நாமே தொடர்ந்து தலைமைத்துவத்தில் இருக்க முடியாது. புதியவர்கள் முன்வர வேண்டும்“ என்றார்.

கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி சமய நடவடிக்கைகளில் அடிக்கடி ஈடுபட்டு வந்தார்.

குறிப்பாக விகாரைகள், கோயில்கள் உட்பட பல்வேறு மத ஸ்தலங்களில் மஹிந்த ராஜபக்ஷ ஆசிர்வாதங்களை பெற்றுக்கொள்வார்.

சிறிதுகாலம் அவர் வழிபாடுகளில் ஈடுபடுவதில் இருந்து விலகியிருந்த நிலையில், மீண்டும் அவர் தமது ஆன்மீக பயணங்களை ஆரம்பித்துள்ளார்.

Popular

More like this
Related

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...

பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும்...