பொரளை அஹதியா இஸ்லாமிய கல்வி நிலையத்தின் 37வது வருடாந்த மீலாதுன் நபி விழா

Date:

37வது வருடமாக பொரளை அஹதியா இஸ்லாமிய கல்வி நிலையத்தினால் மீலாதுன் நபி விழா நிகழ்வுகள் நேற்று (22) நடைபெற்றது.

இந்நிகழ்வு தெமட்டகொட அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. மாநாட்டு மண்டபத்தில் இந்நிகழ்வுகள் அஹதியா பாடசாலையின் அதிபர் அல்-ஹாஜ் ஷிப்லி ஹாஷிம் முன்னிலையில் இடம்பெற்றது.

ருவனிகம சமாதி நாயக்க தேரர், சிவஸ்ரீ குமாரசுவாமி குருக்கள், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி மற்றும் பேராயர் ஜே. ஞானராஜா பாதிரியார் உட்பட சர்வ மத தலைவர்களின் தலைமையில் இவ்விழா நடைபெற்றது.

மேலும், இந்நிகழ்வில் அஹதியா பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட விஷேட விருந்தினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...