ஹமாஸ் -இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் : பேச்சுவார்த்தை நடத்தும் கத்தார்!

Date:

பணயக் கைதிகளாக பிடித்து சென்றவர்கள் நிலை என்னவாகும் என்பதுதான் உலக நாடுகள் இடையே பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் சிறையில் பாலஸ்தீனர்கள் உள்ளனர். இஸ்ரேல் பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய வேண்டும். ஹமாஸ் பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளவர்களை விடுவிக்க வேண்டும் என கத்தார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கத்தார் அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் ஹமாஸ்- இஸ்ரேல் பக்கத்தில் இருந்து இது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.தோகா மற்றும் காசாவில் உள்ள ஹமாஸ் அதிகாரிகளுடன் கத்தார் தொடர்பில் இருந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு இந்த பேச்சுவார்த்தை முக்கியமானதாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஆனால், காசாவில் தாக்குதலை முடிக்கும் வரை இஸ்ரேல் பேச்சுவார்த்தைக்கு வருமா என்பது தான் சந்தேகம்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...