அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் பொன்விழா: நாளை (29) ஆம் திகதி!

Date:

அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் பொன்விழா நிகழ்வும் 50 ஆவது வருடாந்த மாநாடும் (29) ஆம் திகதி ஞாயிறுக்கிழமை காலை 9:00 மணிக்கு கொழும்பு 07 விளையாட்டுதுறை அமைச்சு கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த  நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன கலந்து கொள்ளவுள்ளதோடு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

மேலும் விசேட அதிதிகளாக இந்திய பாராளுமன்றத்தின்(லோக்சபா) முன்னாள்உறுப்பினரும் இந்திய முஸ்லிம் லீக்கின் தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொஹிதீன் மற்றும் தமிழ் நாடு,இராமநாதபுரம் தொகுதி இந்திய பாராளுமன்ற (லோக்சபா) உறுப்பினர் கே.நவாஸ் கனி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...