ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் இதுவரையில் 4,000 பேர் பலி!

Date:

ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,000 ஐ தாண்டி இருக்கும் நிலையில் இன்று மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியான ஹெராட்டில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. அதன் தொடர்ச்சியாக அங்கு 5 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

4.6 முதல் 6.3 வரை ரிக்டர் அளவுகோலில் அந்த நிலநடுக்கங்கள் பதிவாகி இருக்கின்றன. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

ஏராளமான பொதுமக்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்து இருக்கின்றனர். நிலநடுக்கம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். பேரழிவை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கத்தில் சிக்கியவர்களின் உடல்களை மீட்பதில் தொடர்ந்து சிரமம் ஏற்பட்டு வருகிறது.

5 நாட்களாக நடைபெற்று வரும் மீட்புப் பணியில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

இந்த துயரம் தீர்வதற்குள் ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

காலை 6.11 மணியளவில் ஏற்கனவே நிலநடுக்கம் ஏற்பட்ட ஹெராட் பகுதியில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில், பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்து உள்ளது.

இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...