சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தள பாதுகாப்பு தொடர்பான உத்தேச சட்டமூலத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்தக்கூடிய சாத்தியம் உள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் கவலை வெளியிட்டுள்ளார்.
தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலம் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக கட்டுப்பாடுகளை விதிப்பதில் அதிக கவனம் செலுத்துவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமூக வலைத்தள பாவனையாளர்கள் மற்றும் இதில் தமது கருத்துகளை சுதந்திரமாக வெளியிடுபவர்களின் கருத்துச் சுதந்திரத்தை உத்தேச சட்டமூலம் கட்டுப்படுத்துவதாக உள்ளது. இந்தச் சட்டமூலம் அரசியல் நோக்கங்களுக்காகவே கொண்டுவரப்படுகிறது.