இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை மீளாய்வு செய்யுமாறு வலியுறுத்தல்!

Date:

வர்த்தமானியில் அண்மையில் வெளியிடப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை மீளாய்வு செய்யுமாறு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

அதேநேரம் அதற்காக ஏழு பரிந்துரைகளை ஆணைக்குழு அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,  ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

குறித்த கடிதத்தில்,  இலங்கை அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்துடன் இணங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் குறித்த சட்டமூலத்தை மீளாய்வு செய்வதற்கு, பொது அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகள் பரிசீலனைக்காக முன்வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளது.

அப்பாவி மக்கள் குற்றவாளிகளாக்கப்படும் சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும், அவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் சாதாரண நீதிமன்றங்களின் ஊடாக நட்டஈட்டை பெறுவதற்கான வழிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொலிஸாரின் விசாரணைகளுக்கு உதவும் நோக்கில், நியமிக்கப்படும் நிபுணர்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுதல் தவிர்க்கப்படல் வேண்டும் உள்ளிட்ட 7 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, உலகின் மிகப் பெரிய சமூக ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆசிய இணையக் கூட்டணி, இலங்கையின் இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளது.

ஆசிய இணையக் கூட்டணி என்பது முன்னணி இணையம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு தொழிற்சங்கமாகும்.

இதில் Google, Meta, Amazon, Apple, Booking.com, Expedia Group, LinkedIn, Spotify ஆகிய நிறுவனங்கள் உறுப்பினர்களாக அடங்குகின்றனர்.

இந்தச் சட்டமூலமானது கருத்து வேறுபாடுகளையும், இலங்கையர்களின் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமைகளையும் நசுக்குவதற்கு ஒரு கொடூரமான கட்டமைப்பை வழங்குவதாக ஆசிய இணையக் கூட்டமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜெஃப் பெயின் (Jeff Paine) அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் எந்தவொரு பங்குதாரர்களின் ஆலோசனையையும் மேற்கொள்ளாமல் இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை முன்னெடுத்து செல்கின்றமை குறித்து கவலையடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது உறுப்பினர்களின் சேவைகளை பயன்படுத்தும் பயனர்களின் பாதுகாப்பை தாம் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், அதற்கான முயற்சிகள் சட்டத்தின் மூலம் முடக்கிவிடக் கூடாது எனவும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

இலங்கை அரசாங்கம் நியாயமானதாகவும், சர்வதேச தரங்களுக்கு இணங்கவும் தொழில்துறையில் உள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சியை ஆதரிக்கும் விதிமுறைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஆசிய இணைய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...