இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிராக இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் மனு தாக்கல்

Date:

இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம், இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிராக நேற்று நேற்றையதினம் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்துள்ளது.

சங்கத்தின் தலைவர் துமிந்த சம்பத், முன்னாள் தலைவர்/நிறைவேற்றுக்குழு உறுப்பினர் லசந்த ருஹுனுகே மற்றும் பொருளாளர் டி.நடராசா ஆகியோர் இலக்கம் SC SD 67/2023 இன் கீழ் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

மனுவில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன ஆஜராக உள்ளார்.

இதேவேளை, நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் நேற்று பிற்பகல் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த சட்டமூலத்தின் சில விதிகள் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணாக உள்ளதாக சமூக ஆர்வலரும் சுயாதீன ஊடகவியலாளருமான தரிந்து உடுவரகெதரவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

டயானா கமகேவுக்கு நீதிமன்றம் பிடியாணை

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

எதிர்வரும் நாட்களில் வானிலையில் மாற்றம்!

எதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் மாலை...