இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை வரவுள்ளார்.
‘IORA’ (Indian Ocean Rim Association) என கூறப்படும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைந்துள்ள 23 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டில் கலந்துகொள்வார்.
மாநாடு நாளை புதன்கிழமை கொழும்பில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று இரவு அல்லது நாளை முற்பகல் வேளையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வரவுள்ளார்.
‘IORA’ அமைப்பின் 2023-2025 காலப்பகுதிக்கான தலைமை பதவியை இலங்கை வகிப்பதால் இம்முறை ‘IORA’ மாநாடு இலங்கையில் இடம்பெறுகிறது.
கடந்த ஆண்டு மாநாடு பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்றது.
இலங்கையில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்துவரும் பின்புலத்தில் ‘IORA’ மாநாடு இலங்கையில் நடைபெற உள்ளது. இது சர்வதேச ரீதியில் பெரும் அவதானம் மிக்க மாநாடாக மாறியுள்ளது.