பலஸ்தீனில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அத்துமீறல்களுக்கு மத்தியில் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பலஸ்தீனுடனான தமது நட்புறவை வெளியிட்டார்.
இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் கலாநிதி ஸுஹைர் ஹம்தல்லா தார் அவர்களை இன்று பலஸ்தீனத் தூதரகத்தில் சந்தித்து பலஸ்தீனுக்கான தமது ஆதரவை வெளியிட்டதோடு பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களுக்காக தமது அனுதாபத்தையும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவருடன் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.