இஸ்ரேலில் காயமடைந்த இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்!

Date:

இஸ்ரேல் படையினருக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின்போது காயமடைந்த இலங்கை பிரஜை, சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்தவர் என கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் அவருக்கு அந்த நாட்டிலிருந்து எந்தவித நட்டஈடும் வழங்கப்பட மாட்டாது என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் சுற்றுலா விசாவில் ஜோர்தானுக்குச் சென்றதாகவும், அதன் பின்னர் சட்டவிரோதமாக இஸ்ரேலுக்கு சென்று பணிபுரிந்து வந்துள்ளதாகவும் தூதுவர் நிமல் பண்டார ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜோர்தான் எல்லை வழியாக சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்த இரண்டு இலங்கைப் பெண்கள் இஸ்ரேல் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார நேற்று தெரிவித்தார்.

எனவே யுத்த சூழ்நிலையில் சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் வருவதை தவிர்க்குமாறு இலங்கை தூதுவர் நிமல் பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் போலி அழைப்புகள்!

தனிநபர் விபரங்களைப் பெற்று நிதி மோசடி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட சில...

ருஹுனு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக ஜயசிங்கவின் தந்தை காலமானார்

ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிங்கள ஆய்வுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக...

900 பேருக்கு மருத்துவ சேவை: பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்க MFCD மற்றும் ஜப்பான் நிறுவனங்களின் கூட்டு முயற்சி

'டிட்வா'   புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக நடத்தப்பட்ட இறுதி கட்ட தொற்றா நோய்கள்...