இஸ்ரேல் – பலஸ்தீன மோதலை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பும் பாதுகாப்புச் சபையும் முன்னின்று செயற்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (19) இடம்பெற்ற இஸ்ரேல் பலஸ்தீன முரண்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
” இந்தப் போரை நிறுத்த உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் ஒரே நிலைப்பாட்டில் செயல்பட வேண்டும் .
ஐக்கிய நாடுகள் சபையும் பாதுகாப்புச் சபையும் உடனடியாக தலையிட்டு போரை நிறுத்த வேண்டும். இந்த யுத்தத்தினால் முழு உலகமே அழியும் அபாயம் உள்ளது.
இதன் காரணமாக வறிய நாடுகள் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படும். எனவே போரை நிறுத்துவதற்கு உலக வல்லரசு நாடுகள் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.