இரஸ்ரேல் -ஹமாஸ் அமைப்புக்கும் இடையில் இடம்பெற்றுவரும் போர் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இந்த விவகாரம் தொடர்பில் விவாதம் நடத்தப்படுமென சபாநாயகர் பதிலளித்தார்.
இதன்போது இஸ்ரேல் – பலஸ்தீனத்துக்கு இடையிலான போரில் தீவிரவாதிகளாலும் மக்கள் கொல்லப்படுவதுடன், அரச பயங்கரவாதத்தாலும் மக்கள் கொல்லப்படுகின்றனர்.
இதனால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்த விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் கோரிக்கை விடுத்தார்.
அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோரும் இந்த விவகாரம் தொடர்பில் பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
விவாதம் நடத்துவதன் ஊடாக போர் காரணமாக இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சபைக்கு அறிவிக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பலரது கோரிக்கையின் பிரகாரம் சபையில் இதுகுறித்து விவாதம் நடத்தப்படுமென சபாநாயகர் அறிவித்தார்.