இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு ஐ.நா. சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
‘இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் போராளிகளின் தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். மேலும் வன்முறைகளை தவிர்த்து அமைதிக்கான வழியை தேடுமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.