முதல் முறையாக ரியாதில் அமைந்துள்ள அமீரா நூரா பல்கலைக்கழகத்தில் கடந்த வியாழக்கிழமை ஹப்ஸா முஹம்மத் பெரோஸ் என்ற பெண்மணி தனது முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.
”இமாம் இப்னு ஹஜர் ரஹ் அவர்களின் தஹ்தீபுத் தஹ்தீப் நூலில் இடம்பெறாத இமாம் புகாரியின் அத்தாரீகுல் கபீர் நூலில் இடம்பெற்ற அறிவிப்பாளர்களை ஒன்று திரட்டலும் ஆய்வு செய்தலும்” என்ற தலைப்பில் தனது ஆய்வைச் சமர்ப்பித்திருந்தார்.
இவரது தந்தை முஹம்மத் பெரோஸ் ரியாத் தஃவாக் களத்தில் மிகப் பெரும் பங்காற்றியவர் மாத்திரமின்றி தனது பிள்ளைகளை லௌகீகம் ஆன்மீகம் இரு துறைகளிலும் பரிணமிக்கச் செய்துள்ளார்.
இவரது மூத்த மகள் அல்குர்ஆனை மனனம் செய்த ஒரு வைத்தியர். அவரது கணவனும் மார்க்கப்பற்றுள்ள ஒரு வைத்தியர். ஒரு மகன் பொறியியலாளர். அவரும் அல்குர்ஆனை மனனம் செய்வதில் ஈடுபட்டுள்ளார்.
இலங்கையில் பல முஸ்லிம் பெண்கள் முதுமாணி கலாநிதிப் பட்டங்கள் பெற்றிருந்தாலும் இஸ்லாமியக் கற்கையில் ஆய்வு சமர்ப்பித்து முதுமாணிப் பட்டம் பெற்றவர் இவராவார்.
