உலகின் மிகப் பெரிய விமானம் தாங்கிக் கப்பலை இஸ்ரேலுக்கு நகர்த்துகிறது அமெரிக்கா

Date:

இஸ்ரேலுக்கு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இருக்கிறது எனத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கான தமது ஆதரவு மலையளவு உறுதியானது எனத் தெரிவித்தார்.

ஹமாஸின் தூபான் அல் அக்ஸா தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா இராணுவ உதவிகளை இஸ்ரேலுக்கு அனுப்புவதாக அறிவித்தது.

இந்நிலையில் உலகின் மிகப் பெரிய விமானம் தாங்கிக் கப்பலான USS Gerald R Ford இனை இஸ்ரேலை நோக்கி நகர்த்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லொய்ட் ஒஸ்டின் தெரிவித்தார்.

அமெரிக்கா வருடாந்தம் 3 பில்லியன் டொலர்களை இஸ்ரேலுக்கு இராணுவ உதவியாக வழங்கி வருகிறது என அல்ஜஸீராவின் வொஷிங்டன் செய்தியாளர் அலன் பிஷர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பை பலஸ்தீனர்கள் மீதான ஆக்கிரமிப்புக்கான நேரடிப் பங்களிப்பு என ஹமாஸ் அறிவித்துள்ளது.

இதேவேளை மூன்றாம் தரப்பு இந்த விடயத்தில் தலையிடுவது high risk ஆனது என ரஷ்யாவின் கிரெம்லின் பேச்சாளர் Dmitry Peskov தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...