இந்த நாட்களில் நாடு முழுவதும் பெய்து வரும் கடும் மழை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு அக்டோபர் 17ஆம் திகதி முதல் அக்டோபர் 20ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டின் தென்மேற்கு பகுதி உட்பட பல பகுதிகளில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும், சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.