5000 அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் மாதம் கையளிக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அனைத்து தரங்களுக்குமான அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் இவ்வாறு கையளிக்கப்படவுள்ளன.
இதேவேளை, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்களின் சம்பளமும் அதிகரிக்கப்படும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். “மூன்று தரங்களிலும் சுமார் 5000 அதிபர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றனர்.
அவர்களின் நியமனக் கடிதங்களை எதிர்வரும் மாதம் 4ஆம் திகதி வழங்க நாங்கள் தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.