காஸா போர் நிறுத்த முன்மொழிவுக்கு சார்பாக இலங்கை வாக்களித்துள்ளமையை ஜம்இய்யத்துல் உலமா வரவேற்கின்றது

Date:

கடந்த 26 ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 10 ஆவது அவசர கால சிறப்பு அமர்வில், ஜோர்டான் சார்பில் மனிதாபிமான போர் நிறுத்தம் குறித்த தீர்மானம் முன்மொழியப்பட்டது.

மேற்குறித்த தீர்மானத்திற்கு சார்பாக  இலங்கை அரசும் வாக்களித்துள்ளமையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கை வாழ் மக்கள் சார்பாக வரவேற்பதுடன், தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.

இந்தத் தீர்மானத்தில், காஸா மீது நடாத்தப்படும் போர் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டுமெனவும், காஸா மக்களுக்கு தண்ணீர், உணவு, மருத்துவப் பொருட்கள், எரிபொருள் மற்றும் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டன.

அதைத் தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்பு, சட்டம் மற்றும் மனிதாபிமான கடமைகளை நிலைநிறுத்துதல் என்ற விவாதத்தின் அடிப்படையில் இத்தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இதன்போது இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 120 நாடுகளும், எதிராக 14 நாடுகளும் வாக்களித்திருப்பதுடன், 45 நாடுகள் வாக்களிப்பிலிருந்து விலகி இருந்தன.

தற்போதைய பொருளாதார நெருக்கடியான இச்சூழ்நிலையில் மனிதநேயம், நீதி மற்றும் நேர்மையை அடிப்படையாக வைத்து இவ்வாறான நிலைப்பாடொன்றை எடுத்திருப்பது பாராட்டத்தக்க விடயமாகும்.

 

Popular

More like this
Related

இன்று இரவு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும்...

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...