இந்தோனேசிய கடற்படைக்குச் சொந்தமான ‘KRI Bima Suci – 945’ எனும் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ள கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றுள்ளனர்.
‘KRI Bima Suci – 945’ எனும் பயிற்சி கப்பலானது 95 பயணிகளால் நிர்வகிக்கக்கூடியதாக அமைந்துள்ளது.
குறித்த கப்பல் நாட்டில் நங்கூரமிட்டிருக்கும் காலப்பகுதியில் கப்பலின் பணியாளர்கள் நாட்டின் சில சுற்றுலாத் தளங்களுக்குச் செல்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ‘KRI Bima Suci – 945’ கப்பல் தமது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துகொண்டு இன்று மாலை நாட்டைவிட்டு வெளியேறுமென எதிர்பார்க்கப்படுகிறது.