ஜனாதிபதி சீனாவுக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம்!

Date:

சீனாவில் நடைபெறும் Belt & Road திட்டத்தின் 03ஆவது சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு (15) சீனா சென்றுள்ளார்.

இதன்படி, ஜனாதிபதி இன்று ஒக்டோபர் 16 ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் சீனாவிற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி வெளிநாடு சென்றுள்ள காலப்பகுதியில் அவருக்கு கீழுள்ள அமைச்சுகளின் பொறுப்புகள் இராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இன்று (16) முதல் இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், பாதுகாப்பு பதில் அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நிதி பதில் அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராகவும், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி சுற்றாடல் பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...