நாட்டின் சிரேஷ்ட பத்திரிகை கலைஞரான “திவயின” பத்திரிகை ஆசிரியர் பீடத்தின் முதலாவது இணை ஆசிரியரும் பணிப்பாளருமான எட்மண்ட் ரணசிங்வை கௌரவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாளை (03) மாலை 3.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய முன்னெடுக்கப்பட்டு வரும் இந்நாட்டின் பத்திரிகை துறையில் விலைமதிப்பற்ற பணிகளை மேற்கொண்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர்களை கௌரவிப்பதற்கான ஆரம்ப நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனது வாழ்வில் 93 ஆவது வயதை எட்டியிருக்கும் ரணசிங்கவின் ஏழு தசாப்த ஊடக பணியை பாராட்டும் வகையில் எழுதப்பட்ட எட்மண்ட் பத்திரிகைப் புரட்சி
(“எட்மண்ட் பத்தர விப்லவய”) எனும் நூல் வெளியீட்டு நிகழ்வும் இடம்பெறவுள்ளது.