டிக்கெட் இல்லாமல் பேருந்தில் சென்றால் அபராதத் தொகை: ரூ.3,000 ஆக உயர்த்த தீர்மானம்!

Date:

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களுக்கான அபராதத்தை மூவாயிரம் ரூபாவாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனால், டிக்கெட் எடுக்காமல் பிடிபடுபவர்கள், மூவாயிரம் ரூபாய் அபராதத்துடன், இரு மடங்கு கட்டணத்தை செலுத்த வேண்டும்.

பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களால் நாளாந்தம் சுமார் 70 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறியப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தால், 250 ரூபாய் அபராதமும், இரண்டு மடங்கு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...