ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தன்னை “பெட்டை நாய்” என கூறி அவமனப்படுத்தியதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இருக்கும் சில பண்டாரக்களுக்கு பெண்களுடன் ஏதோ ஒரு பாக்கி உள்ளது. இதனால், இந்த பண்டார குழுவினரை திருத்தி வைத்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.
எனக்கு ஏற்பட்ட அவமதிப்பு சம்பந்தமாக பாராளுமன்றத்தில் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் டயனா கமகே கூறியுள்ளார்.