நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்துக்கு எதிராக விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலி, உயர் நீதிமன்றத்தில் இன்று (16) மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை இச்சட்டமூலம் கேள்விக்குட்படுத்துவதாக தெரிவித்தே குறித்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி அரவிந்து மனதுங்க ஆராய்ச்சியின் ஊடாக இந்த அரசியலமைப்புடமை விசேட நிர்ணய மனுத் (Special Determination) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடனும், மக்கள் தீர்ப்பளிப்பின் மூலமூமே இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என உத்தரவிடுமாறும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணாக உள்ளதாக வலியுறுத்தி பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
மனுவில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.எல். பீரிஸ், ரஞ்சித் மதும பண்டார, ஊடகவியலாளர்களான லசந்த ருகுணுகே, தரிந்து உடுவரஹே உள்ளிட்ட பலர் நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.