குளியாப்பிட்டியில் நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் நேற்று (27) பொலிஸ் விசேட குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளால கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் வெளிநாட்டில் தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக கூறி சிலரிடம் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
ஜப்பானில் தொழில் வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி 163 இலட்ச ரூபாவுக்கும் அதிகளவில் அவர்கள் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.